Benefits

Benefits Of Banana : வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்

முக்கனிகள் மா, பலா, வாழை என்பது அனைவரும் அறிந்ததே. அதில் நம்மை சுற்றி காணப்படும் வாழைப்பழமானது விலை மலிவாகவும், அனைத்து கால நிலைகளிலும் நமக்கு கிடைக்கும் ஒரு அரிய பழ வகையாகும். இனிப்பு சுவையுடைய வாழைப்பழத்தை சிறிய குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர். இதனை நாம் தினமும் சாப்பிடும்போது இதில் அடங்கியுள்ள வைட்டனிகள் மற்றும் தாதுக்கள் நம் உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. இந்த பதிவில் வாழைப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள், வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், மருத்துவ பயன்கள் மற்றும் அதனை அதிகமாக சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் தீமைகள் பற்றியும் தெளிவாக காணலாம்.

வாழைப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

Contains in Bananas: நாம் தினமும் உட்கொள்ளும் ஒரு நடுத்தர அளவு (100 கிராம்) வாழைப்பழத்தில் கிழே கொடுக்கப்பட்டுள்ள தோராய அளவிலான சத்துக்கள் காணப்படுகிறது.

  • கலோரி – 89
  • பொட்டசியம் – 358 மில்லி கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள் – 22.83 கிராம்
  • நார்ச்சத்து – 2. 5 கிராம்
  • சர்க்கரை – 12.2 கிராம்
  • கொழுப்பு – 0
  • நீர்சத்து – 66 கிராம்
  • புரோட்டின் – 1.1 கிராம்

வாழைப்பழத்தின் வகைகள்:

Types Of Bananas: நம்மை சுற்றி கிடைக்கும் வாழைப்பழத்தில் பேயன் வாழை, செவ்வாழை, பச்சை வாழை, ரஸ்தாளி, மலை வாழை, பூவன், மொந்தன், நேந்திர வாழை, ஏலரிசி வாழை, கற்பூர வாழை, வெள்ளை வாழை, மோரீஸ் வாழை என பல்வேறு வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகையான வாழைபழ வகைகளும் அவற்றிக்கென்று தனித்துவமான உடலுக்கு நன்மை தரக்கூடிய பயன்களை கொண்டுள்ளது. இதில் குறிப்பாக ஒரு சில உடல் நல பிரச்சனைகளை உடையவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வாழைப்பழ வகைகளில் சிலவற்றை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-

1. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த:

Banana benefit in bone and teeth health: பெரும்பாலும் 35 வயதிற்குப் பிறகு நமது உடலில் உள்ள எலும்புகளின் தேய்மானத்தால் எலும்பு வலி ஏற்பட தொடங்குகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தினமும் ஒரு ஏலக்கி வகை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர இதில் அடங்கியுள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை எலும்பு மற்றும் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும், எலும்பு கட்டமைப்பின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. தசை வளர்ச்சிக்கு:

Banana helps in muscle building: நமது உடலில் பொட்டாசியத்தின் அளவு குறையும் வேலையில் தசைகள் பலவீனமடைந்து தசைப்பிடிப்பு ஏற்படும்.
நாம் தினமும் உட்கொள்ளும் ஒரு சராசரி அளவிலான வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படும். வாழைப்பழம் சாப்பிடுவதால் தசைப்பிடிப்பு ஏற்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல் தோல் விரைவில் சுருக்கமடையாமல் சருமத்தைப் பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

3. பார்வை திறனை அதிகரிக்க:

Bananas for eye health: கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை ஒரு முக்கியமான மருத்துவ ஆதாரமாக விளங்குகிறது. இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. மாலைக்கண் நோய் உள்ளவர்கள் மற்றும் கண் பார்வை குறைய ஆரம்பிப்பது போல் உணர்பவர்கள் தினமும் இரவு உணவிற்குப் பிறகு ஒரு செவ்வாழை எடுத்து வர கண் பார்வை தெளிவடையும்.

4. செரிமான அமைப்பை மேம்படுத்த:

Benefits of banana in digestion: பச்சை வாழைப்பழத்தில் அடங்கியுள்ள நார்ச்சத்துக்கள் ஒழுங்கற்ற குடல் இயக்கத்தை சரி செய்து, உணவு செரிமானத்திற்கு உதவுவதோடு குடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது பெருங்குடலை பாதுகாக்கும் நுண்ணுயிரிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பச்சை வாழைப்பழம் மலச்சிக்கலை குணப்படுத்தி மூலம் போன்ற நோய்கள் மற்றும் குடல்புண் ஆகியவற்றை நமக்கு வராமல் தடுக்கிறது.

5. நல்ல மனநிலையை உருவாக்க:

Benefits of banana for mental health: வாழைப்பழத்தில் நம்முடைய மூளைக்கு மகிழ்ச்சியான மற்றும் நல்ல மன ஆரோக்கியத்தை கொடுப்பதற்கான வைட்டமின் பி6 நிறைந்து காணப்படுகிறது. டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவை நரம்பியக்கடத்திகளை உருவாக்கி மனசோர்வு மற்றும் நேர்மறையான எண்ணங்கள் போன்ற மனநல கோளாறுகளை சரி செய்கிறது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் தேர்விற்கு முன்பு வாழைப்பழத்தை உண்ணும் பொழுது உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கும். நினைவாற்றலை அதிகப்படுத்தி மனதை கூர்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் உறக்கத்தை தூண்டி தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.

6. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த:

Health benefits of banana in heart: ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 300 இல் இருந்து 400 மில்லிகிராம் அளவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது தினசரி நமது உடலுக்கு தேவையான பொட்டாசியத்தின் அளவை 10% வரை பூர்த்தி செய்கிறது. மேலும் இதில் சோடியத்தின் அளவு குறைவாகவும் பொட்டாசியத்தின் அளவு அதிகமாகவும் காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை சீராக இயங்க வழிவகை செய்கிறது. தொடர்ச்சியாக வாழைப்பழம் சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

Benefits of banana in immunity boosting: வாழைப்பழத்தில் உள்ள லெக்டின் என்ற பொருள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அடிக்கடி காய்ச்சல், சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இம்மாதிரியான பிரச்சனைகள் நமக்கு அடிக்கடி நேராமல் இருக்க வழிவகை செய்கிறது. மேலும் ரத்த சோகை மற்றும் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

8. உடல் எடையை அதிகரிக்க:

Banana helps in weight gain: நேந்திர வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைந்த அளவிலும் காணப்படுவதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. தினமும் இரண்டு வாழைப்பழங்களை பாலுடன் சேர்த்து உண்ணும் பொழுது இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை நம்முடைய உடல் எடையை ஊக்குவிக்கிறது. வாழைப்பழம் எந்த அளவிற்கு உடல் எடையை அதிகரிக்க உதவுகிறதோ அதே அளவு உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்த பொருளாக உள்ளது. சாப்பிடும் பொழுது உணவின் அளவை குறைத்து கூடுதலாக ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இது உங்களுக்கு தேவையான தினசரி கலோரியின் அளவு மீறுவதற்கான வாய்ப்பை தடுத்து உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.

9. ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க:

Banana increase blood cells: நமது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதனால் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிப்பது அவசியமானதாகும். தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வர இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்கள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கிறது.

வாழைப்பழத்தை பயன்படுத்தும் முறைகள்:-
(Ways to use banana)

• நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து பாதாம் அல்லது வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து தோசையின் மீது தடவி சாப்பிடலாம்.
• வாழைப்பழத்தை சிப்ஸ் செய்து மொறுமொறுப்பாக ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
• நாம் எடுத்துக்கொள்ளும் ஸ்மூத்திகளில் கலந்து பருகலாம்.
• இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதன் இடையில் வேர்க்கடலை வெண்ணையை தடவி துண்டாக நறுக்கப்பட்ட வாழைப்பழத்தை இவைகளுக்கு இடையே வைத்து சாப்பிடலாம்.
• வாழைப்பழத்தை துண்டு துண்டாக வெட்டியோ அல்லது கூழாக்கி ஐஸ்கிரீம், ஃப்ரூட் சாலட் போன்று அனைவரும் விரும்பும் வகையில் எடுத்துக் கொள்ளலாம்.

வாழைப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் :-
(Side effects of eating banana)

• வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் அதனை அதிகப்படியாக உண்ணும் பொழுது நமக்கு ஒற்றை தலைவலியை ஏற்படுத்துகிறது.
• இதிலுள்ள அதிகப்படியான மாவுச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் வாயு தொந்தரவு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி ஏற்படுகிறது.
• வாழைப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் இதனை அதிக அளவு உட்கொள்ளும் பொழுது ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம் அல்லது குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
• வாழைப்பழத்தை உண்ட பிறகு அதன் துகள்கள் பல் இடுகுகளில் தங்குவதால் பல் சிதைவு ஏற்படுகிறது.
• சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் அடங்கியுள்ள அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரக செயல்பாட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பொறுப்புத் துறப்பு:-
இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இவைகளை மட்டும் கொண்டு உடல் நலப் பிரச்சினைகள் அல்லது நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது. உங்கள் உடல் நலம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் தகுதி வாய்ந்த சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை பெறவும். TamilCare.in தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் கொண்டு நீங்கள் முடிவெடுத்தால் அது உங்கள் சொந்த முயற்சியில்தான் செய்கிறீர்கள். நீங்கள் எடுக்கும் சுயமான முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *