Glowing Skin : இதை செய்தால் கருத்துப்போன முகம் பளிச்சென்று மாறிவிடும்.!
உலகத்தில் பிறந்த எந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களுடைய சருமத்தை பளிச்சென்று பலபலவென அழகாக வைத்திருப்பதற்கே மிகவும் விரும்புகின்றனர். ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய வாழ்வியல் மாற்றங்களால் நம்முடைய சருமம் பாதிப்படைகிறது. இன்றைய பதிவில் நம்முடைய முகத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு (Glowing Skin) தேவையான வாழ்வியல் மாற்றங்களை பற்றி விரிவாக காண்போம்.
பளபளப்பான சருமத்திற்கான வாழ்வியல் மாற்றங்கள்:-
ஆரோக்கியமான சருமத்தை பெற வேண்டும் என்றால் நம்முடைய வாழ்வியலில் சில மாற்றங்களை கட்டாயம் செய்ய வேண்டும். அவை நம் சருமத்தை பாதுகாப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1. தீய பழக்கங்களை கைவிடுவது

புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது நம்முடைய தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வழிவக்கிறது. இந்த பழக்கவழக்கங்கள் இளம் வயதிலேயே நம்முடைய சருமத்தை முதிர்ச்சி அடையச் செய்து தோல் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நாம் புகை பிடிக்கும் பொழுது நம்முடைய உதடுகள் கருப்படையும். உங்களுடைய சருமத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால் தீய பழக்கங்களில் இருந்து வெளிவருவது நல்லது.
2. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது
அதிக மன அழுத்தம் சரும பாதிப்பை ஏற்படுத்துவதோடு முகப்பரு வெடிப்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தை குறைப்பதற்கு சரியான அளவு தூக்கம், பிடித்த இசைகளை கேட்பது, விரும்பும் செயல்களில் நேரத்தை செலவிடுவது, தியானம் அல்லது யோகாவை முயற்சி செய்யுங்கள். உங்களுடைய மன ஆரோக்கியம் சரும பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
3. அதிகப்படியான தண்ணீரை பருகுவது
நான் அன்றாட வாழ்வில் தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதால் நம் உடலானது நீரேற்றமாக இருக்கும். இது நம்முடைய சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைத்திருப்பதோடு முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. முகத்தை கழுவும் போது வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
4. சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்
சூரிய ஒளியில் உள்ள UV கதிர்கள் என்று அழைக்கப்படும் புற ஊதா கதிர்கள் நம்முடைய தோளில் உள்ள செல்களை சீர்குலைக்கிறது. நீங்கள் அதிகப்படியான வெயிலில் வெளியே செல்லும் பொழுது கட்டாயமாக சன் ஸ்கிரீமை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் சூரிய ஒளி படாதவாறு நம்முடைய தோலை துணியால் மூடிக்கொண்டு வெளியே செல்வது நல்லது. இது நம்முடைய தோலின் நிறமாற்றம், கரும்புள்ளிகள் மற்றும் மந்தத் தன்மையை சரி செய்கிறது.
5. முகத்தை சுத்தம் செய்தல்
Glowing skin in tamil tips: நாம் வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு நம்முடைய முகத்தை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக தூசுக்கள் மற்றும் அழுக்குகள் நம்முடைய சருமத்தை பாதிப்படைய செய்யும். வலுவான சோப்புகளை பயன்படுத்தி சருமத்தில் உள்ள எண்ணெய்யை அகற்றுவதற்கு பதிலாக குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது. உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு, சருமம் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்க கிளன்சரை பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள் :- உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவு வகைகள்.!
6. போதுமான உறக்கம்

ஒருவருடைய தோல் ஆரோக்கியத்திற்கு சரியான அளவிலான உறக்கம் மிகவும் இன்றியமையாததாகும். ஒருவரிடம் போதுமான உறக்கம் இல்லை என்றால் அவர்களின் முகம் பொலிவிழந்து சுருக்கங்கள் மற்றும் கண்களின் கீழ்ப்புறம் கருமையான வட்டங்கள் போன்றவை தோன்றும். இது நமது இறந்த செல்கள் புதுப்பிப்பதை தடுத்து தோல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தினமும் 7 முதல் 9 மணி நேர அமைதியான உறக்கம் நம்மை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.
7. கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்
சந்தைகளை விற்கப்படும் வேதிப்பொருட்கள் கலந்த பல அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து கற்றாழை ஜெல்லை முகத்தில் பயன்படுத்தலாம். இயற்கையான முறையில் கற்றாழையானது நமது தோலை மென்மையாக மாற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முதலில் கற்றாழை ஜெல்லை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதனை வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தலாம் அல்லது கற்றாழை ஜெல்லை கடலை மாவுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போன்று பயன்படுத்தலாம்.
8. காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்
Skin glowing fruits and vegetables: வைட்டமின் ஏ, சி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் நம்முடைய சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அவகாடோ, கேரட், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, பூசணிக்காய் மற்றும் நட்ஸ் போன்றவை நமக்கு இளமையான மற்றும் ஒளிரும் சருமத்தை கொடுக்கிறது. மேலும் நம்முடைய உணவில் சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது தோல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகும்.
9. கிரீன் டீ குடிக்கலாம்
கிரீன் டீயில் நமது சருமத்திற்கு உட்டமளிக்கக்கூடிய மற்றும் ஹைட்ரேட் செய்யக்கூடிய வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மாசுகளால் ஏற்படும் கரும்புள்ளி, பருக்கள் மற்றும் தோல் எரிச்சல்களை நீக்குகிறது. எண்ணெய் சருமங்களை கொண்டவர்களின் தோல் அதிகப்படியான எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. கிரீன் டீயில் உள்ள மூலப்பொருட்கள் உடலில் உள்ள அமினோ அமிலங்களுடன் கலந்து சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை ஒழுங்குப்படுத்தி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்றுகிறது.
10. மசாஜ் செய்யலாம்
Face massage for glowing: இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்க வாரத்திற்கு இரண்டு முறை முகத்தின் அனைத்து பகுதிகளையும் விரலால் லேசாக மசாஜ் செய்து பழகலாம். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து நம்முடைய முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் தேவையற்ற நச்சுக்களை நீங்குகிறது. இவ்வாறு நாம் செய்யும் பொழுது நம்முடைய முகத்தசைகள் தளர்வடைந்து ரத்த ஓட்டத்தை எளிமையாக மேம்படுத்துகிறது.
பொறுப்புத் துறப்பு:-
இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இவைகளை மட்டும் கொண்டு உடல் நலப் பிரச்சினைகள் அல்லது நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது. உங்கள் உடல் நலம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் தகுதி வாய்ந்த சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை பெறவும். TamilCare.in தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் கொண்டு நீங்கள் முடிவெடுத்தால் அது உங்கள் சொந்த முயற்சியில்தான் செய்கிறீர்கள். நீங்கள் எடுக்கும் சுயமான முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.